அபிவிருத்திக்கா ன உரிமைகள்
அபிவிருத்தி என்பது ஒரு விரிவான பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் செயற்பாடுகள் என்பது அங்கீகரிக்கப்படுகின்றது. இது தனிமனிதன் மற்றும் அனைத்து மக்களதும் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்களது நல்வாழ்வை நிலையானதாக மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டது என்பதுடன் இவற்றின் மூலமாக அபிவிருத்தியில் சுதந்திரமானதும் அர்த்தமுள்ளதுமான பங்கு பற்றுகை மற்றும் நன்மைகள் நியாயமான முறையில் பங்கிடப்படல் போன்றவை ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.
அபிவிருத்திக்கான உரிமையில் மனிதனானவன் அபிவிருத்தியின் மையப் பொருளாகவும், உற்சாகமான பங்குபற்றல் கொண்டவனாகவும், பயன் பெறுபவனாகவும் இருத்தல் வேண்டும்.
அனைத்து மனிதரும் தமது மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்திற்கான முழுமையான கௌரவத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு தனிப்பட்ட வகையிலோ மற்றும் கூட்டாகவோ அபிவிருத்திக்கான பொறுப்பைக் கொண்டுள்ளனர். அதுமடடுமன்றி அவர்களது சமூகக்கடமையுடன் இணைந்த வகையில் மனிதனது சுதந்திரத்தையும் முழுமையான நிறைவையும் உறுதிப்படுத்த முடியும்.. எனவே அபிவிருத்திக்காக பொருத்தமான அரசியல், சமூக மற்றும பொருளாதார ஒழுங்கினை ;அவர்கள் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும்.
அடிப்படை வளங்கள் , கல்வி ,மற்றும் சுகாதார சேவைகள் , உணவு , வீடு, வேலை வாய்ப்பு மற்றும் நியாயமான வருமானப் பங்கீடு போன்றவை கிடைப்பதில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு. அபிவிருத்திச் செயற்பாட்டில் ஊக்கம் மிக்க பங்களிப்பைப் பெண்கள் கொண்டுள்ளமையை உறுதி செய்வதற்கான பயனள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து சமூக அநீதிகளையும் ஒழிக்கும் நோக்கில் பொருத்தமான பொருளாதார சமூக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
News Letters
Press Release

| மாகாணத்தின் செயல்பாடுகள்
நீர், சுற்றுச் சூழல் மற்றும் விவசாயப் பாதுகாப்பு கலந்துரையாடல்
மேற்படி கலந்துரையாடல் கௌரவ பிரதமரின் அலுவலகத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது.
விவசாயம, நீர்ப்பாசனம், குடி நீர் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளுடன் வடமாகாண மக்களின் வசதிகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை அமுற்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளைச் கலந்துரையாடுவதற்காகச் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
சுகாதாரம்
சுகாதாரத்துறைக்கு பேராசிரியர் அருள்குமரன் அவர்களது தலைமையிலான சிறந்த ஒரு குழு ஆலோசனை வழங்குகின்றது. சுகாதார சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறையின் சிறந்த திட்டத்தினைப் பார்வையிடவும்; இடைவெளிகளை மதிப்பீடு செய்யவும் கொழும்பு சுகாதார மருத்துவ உத்தியோகத்தருடன் கூட்டங்களும் நடாத்தப்பட்டன.