top of page

வடக்கின் தொலைநோக்கு

IMG-20211015-WA0016-1.png

ஜீவன் தியாகராஜா 
ஆளுநர்
வடமாகாணம், இலங்கை 

உதவிக்கு அழைக்கவும்  

இலங்கையின் வட மாகாணத்தில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலைமைக்குத் திரும்பி ஒரு தசாப்தத்திற்கு மேலாகியிருந்த போதும் நாட்டிலேயே மிகவும் வறுமையான மற்றும்  குறைந்த போட்டியைக் கொண்ட ஒன்றாக இப்பிராந்தியம் உள்ளது. தேசிய பொருளாதார உற்பத்திக்கு வடமாகாணத்தின் பங்களிப்பு விகிதாசார ரீதியில் குறைவானதாகவே காணப்படுகின்றது. மற்றும் வடமாகாணத்தில் உள்ளடங்கிய  இந்த 5 மாவட்டங்களுக்கிடையில் ஆதிக்கம் பெற்ற யாழ்மாவட்டம் சீரற்ற தன்மையுடன் காணப்படுகின்றது. இன்று விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் இந்த இடைnளி கடக்க முடியாதளவு வளர்ச்சியடைந்து இம்மாகாணத்தின் தொகுதி விடுபட்டு எப்போதும் இலங்கையில் பின்தங்கியவர்களாக மாறுவர் என நான அஞ்சுகின்றேன், 

 

பதவியிலுள்ள ஆளுநர் என்ற வகையில், இப்படி நடப்பதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க விரும்பவில்லை. எனவே பொருளாதார அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளில் உள்நாட்டில் 9 மாகாணங்களில் மட்டுமன்றி பிராந்தியம் ஆகிய இரண்டிலும் முன்னணியில் கொண்டுவருவதற்கு நான் என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.  

வட மாகாணமும் அதன் நிலமும் மக்களுடையது மற்றும் எனது சேவை மக்களுக்கானது என்ற உண்மையை நான் நன்கு அறிவேன். மாகாணத்திற்கான எனது தொலை நோக்கு, மக்களுக்காகச் செய்யப்பட்ட மற்றும் அனைத்து மக்களுக்குரிய வாய்ப்புக்களைச் சுற்றியுள்ளதான திட்டத்தைப் பிராந்திய பொருளாதார பலம்மிக்க் சக்தி கொண்டதாக மாற்றுவதற்குரிய போக்கை இலங்கையின் ஏனைய பகுதிகள் பின்பற்றுவதற்கு; முன்மாதிரியாக அமைவதை நீங்கள் பாரக்க முடியும். இத்திட்டம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்திக்கான கட்டமைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இத்தொலைநோக்கினை விரைவுபடுத்துவதற்காக நான் மாகாணம் அபிவிருத்தியின் திருப்பத்தில் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக நிபுணத்துவ ஆலோசகர்களைக் கொண்ட செயற்பாட்டுக் குழுவை அமைக்கவுள்ளேன். இந்த முன்னேற்றக் குழுவானது அண்மைய சமகால அடிப்படையில் அதி உயர் எண்ணிம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கல், தொடர்பாடல், நிறைவேற்றல், பிரதான செயற்பாட்டுக் குறியீட்டினை இடல், மாகாணத்தின் செயற்பாட்டை அளவிடல் ஆகியவற்றில் எனக்கு உதவிபுரியும்  

நான் ஆளுநராக இருந்து நீண்டகாலத்தின் பின்னும் எனது இச்செயற்பாடு தொடர்ந்து மீளச் செய்யப்படுவதற்குரிய அடித்தளத்தை இடுவதற்கு ஆளுநர் அலுவலகத்துடன் இணைந்த ஒரு சுதந்திரமான அமைப்பாக இயங்கக்கூடியதான குழுவை ஏற்படுத்தியுள்ளேன். இக்குழுவானது மக்கள் , பங்குதாரர், முதலீட்டாளர் மற்றும் நிர்வாகத்தை ஒன்றிணைத்து உதவுவதற்கு வழியாக அமைவதுடன் மாகாணத்தினுள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் தூண்டுதலைத் தொடர்வதையும் உறுதிப்படுத்தும்.

இத்தகைய செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்வதற்காக இக்குழு பலமான தொலை நோக்குடனான சபையாக அமையும் என்பதுடன் அவர்கள்; இதன் செயற்படுத்துகையில் வியாபாரத்தில் புத்திசாலிகளான இளைஞர் குழுவை அருகில் கொண்டு எண்ணிம ஆலோசனையில் தொழில்சார் நிபுணத்துவத்திற்காக மதிக்கப்படுகின்றவர்களுடன்; தலைமைத்துவச் சிந்தனை  மற்றும் ஆட்சியை மாகாணம் பெற்றுக் கொள்ள  ஆழமாக வேரூன்றிய தொடர்பைக் கொண்டுள்ளனர். இவ் அமைப்பு ரீதியான் குழு செயற்படத் தொடங்கியதும் மிக விரைவில் சுயதிருப்தியுடன விளங்குமென நான் கருதுகின்றேன். 

இக்குழு விரைவில் களமிறங்கப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு ஆரம்ப முதலீடு தேவை என்பதுடன் ஆளுநருடைய தற்போதைய பாதீட்டு ஒதுக்கீட்டில் அத்தகைய முதலீடு இல்லை. என்னுடைய தொலைநோக்கு உங்களை உற்சாகப்படுத்துமானால் மற்றும் என்னுடன் இந்தப் பயணத்தில் நீங்களும் பங்கு கொள்ள விரும்பினால் உங்களுடைய ஆதரவை நான் எனது கனவாக மட்டுமன்றி முழு மாகாணத்தினதும் கனவாகக் கொண்டு உங்களுடைய ஆதரவைக் கருத்திலெடுத்துப் பயன்படுத்த நான் மிகவும் தாழ்மையுடன் இருப்பேன்   

Call for help

முதலீட்டாளர் நன்மைகள் 

நிறுவன வரி வருமானம் 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மாற்றுPடுகளுடாக ஈட்டப்படுகின்ற வருமானத்திற்கு 5-10 வருட வரி விடுமுறை வழங்கல்   

வெளி நாட்டுவரி விலக்குகள் 

ஆகக் கூடியது 20 வெளிநாட்டவர்களுக்கு 5 வருடகாலப் பகுதிக்கான வேலைவாய்ப்புக்கான வருமான வரியிலிருந்து விலக்களித்தல்     

பூச்சிய இறக்குமதித் தீர்வைகள் 

மூலதனம் மற்றும் கட்டுமாணம் சம்பந்தப்பட்ட பொருட்கள், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி / செயல்முறை தொடர்பான நுகர்வுகளுக்கான இறக்குமதிக்காக 

100% வெளிநாட்டு உரிமம் 

100% வெளிநாட்டு உரிமம் உழைப்பினால் பெறப்படும் வருவாயைத் திருப்பி அனுப்பல், இலாபத்தால் கிடைக்கும் தொகை, கட்டணங்கள், மூலதனம் மற்றும் அன்னிய செலவாணி அனுமதிக்கப்படகின்றது.    

வெளிநாட்டு வேலை வாய்ப்பு 

சுறப்புத்திறமைகளின் வகைகளுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பை அனுமதித்தல்

பெறுமதிசேர் வரி விலக்குகள் 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்படுத்தப்படக்கூடிய சேவைகளுக்கு பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்குகளை 2020ம் ஆண்டு தைமாதம் 01ம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்போ தொடங்குதல்  

mapR.png

வட மாகாணத்திற்கான மருத்துவ பொருட்கள் 

 22.06.2022 அன்றைய தினத்தில் வடமாகாணத்தின்  வைத்தியத்திற்குரிய பொருட்கள் இல்லாமை , மற்றும் குறைவாக உள்ளமை/   குறைந்த வழங்குகை. 

ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டுமாயின் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்: 

மாகோசா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 

ஜம் குழுவைப் பார்வையிடுக 

bottom of page