
ஜீவன் தியாகராஜா
ஆளுநர்
வடமாகாணம், இலங்கை
ஆளுநருடைய செய்தி
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளித்திருக்கும் தருணத்திலும் இங்கு வாழும் மக்களும் எமது நாட்டைச் சொந்தமாகக் கொண்டு வெளிநாடுகளில் பரந்து வாழுகின்ற மக்களும் மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களிலும் அரசு அக்கறை கொண்டுள்ளது மற்றும் அவர்களது நலனோம்பல், அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகியவற்றிற்காகச் செயற்படுகின்றது என்பதை ஞாபகத்தில் கொள்கின்றனர் வினவுகின்றனர் மற்றும் மீளவும் உறுதிப்படுத்த விரும்புகின்றனர்
2022 பிறந்ததும், "எமது மாகாணமாகிய வட மாகாணம் எம்மில் யாரேனும் பங்குகொண்டு கனவுகளை எய்தக்கூடிய இடமாக இருத்தல் வேண்டும் என்று .நாம் நம்புகின்றோம். அது ஒருவரையும் பின்விட்டுச் செல்லாத ஒரு இடமாக இருத்தல் வேண்டும் என்பதுடன் மிக முக்கியமாகச் சமத்துவத்தை வென்றெடுப்பதாகவும் பல்லினத்தன்மையைக் கொண்டாடுவதான இடமாகவும் இருத்தல் வேண்டும்;. எம்மால் எப்போதும் கடந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்களைப் பின்னால் விட்டுச் செல்ல முடியும் என்பதுடன் எதேனும் காரணத்திற்காகவேனும் மோதல்களால் மீளவும் பின்னடையாது அபிவிருத்தி உள்ளடங்கலான பயணத்தைத் தொடங்க முடியுமென நான் நம்புகின்றேன்."
எம்மிடம் 80% கிராமிய மற்றும் 20% நகர சனத்தொகை காணப்படுகின்றது. எமது வேலையற்றோர் விகிதம் 5%. இது தேசிய சராசரியான 4.8ம% ற்கு மேற்பட்டதாகும். வறுமை நிலையின் தலைக்குரிய எண்ணிக்கையை தேசிய தலைக்குரிய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கும்போது ஐந்து மாவட்டங்களில் மூன்று (3) மாவட்டங்கள் முதல் ஐந்து (5) இடங்களுள் உள்ளன. கடைசி இரு வாசிப்புக்கள் மகிழ்ச்சியடைவதற்குரிய காரணத்தை எமக்குத் தரவில்லை. மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் நல்ல விருப்பும் கொண்ட இம் மாகாணத்தைச் சொந்தமாகக் கொண்டு மாகாணத்திலிருந்து வெளிநாடுகலுள்ள விருப்பமான மனமும் கரங்களும் கொண்ட எமது சொந்தங்களின் 1.26 மில்லியனுடன் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.
தற்போது பதவியிலுள்ள ஆளுநர் என்ற வகையில் தொலை நோக்கானது “பல்லினத் தன்மையைக் போற்றுதல், சமத்துவத்தை வென்றெடுத்தல் மற்றும் அனைத்தும் உள்ளடங்கலான அபிவிருத்தியை அடைதல்.” பணிக்கூற்று “அரசு பொறுப்பு வாய்ந்ததாகவும் , மக்கள் மகிழ்வாகவும் இருப்பது பாதுகாப்பான, வெற்றிகரமான , கலகலப்பான மாகாணம்.” “ஆளுநர்” என்பவர் ஒரு அரசியலமைப்புச் செயற்பாட்டாளர். அரசியலமைப்பிற்கான பாதுகாப்பு ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டிருப்பதால் இந்நோக்கங்களை நானே ஏற்படுத்தி வைத்துள்ளேன். மத்தி மற்றும் மாகாணத்தை ஆட்சிக்காகச் சிறப்பாக ஓன்றுடன் ஒன்று சிறந்த தொடர்புடையதாக அதிகபட்ச நன்மைகள் மாகாணங்களுக்கு அரசியலமைப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளதுடன் ஆட்சியின் நிலைபேறான அபிவிருத்திக்கான தங்கத் தரங்களை எய்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டுத்திறன்களில் உள்ளுரில் 9 மாகாணங்களுக்கிடையில் மட்டுமன்றி பிராந்திய ரீதியிலும் வடமாகாணத்தை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டுமென என்னாலான முயற்சிகளை எடுத்துள்ளேன. பிராந்திய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான போக்கினை இலங்கையின் ஏனைய பகுதிகள் பின்பற்ற முடியுமான முன்மாதிரியாக அமைய அதன் குடிமக்கள் அனைவரதும் அதிஷ்டத்தைத் திருப்ப நாம் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டமானது நிலைபேறான அபிவிருத்திக்கான சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா (UN) கட்டமைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இத்தொலைநோக்கானது தரவு மற்றும் எண்ணிம (டிஜிற்றல்) முறையில் இயக்கப்படுவது. இந்த “JUMP” செயற்பாட்டுக் குழுவானது ஆளுநருடைய அலுவலகத்திற் கூடியமர்ந்து மற்றும் சுதந்திரமாக முகாமைத்துவம் செய்து உண்மையான நிகழ்கால அடிப்படையில் அதி நவீன எண்ணிம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெறிப்படுத்தவும், தொடர்பாடல் செய்யவும தேவையான செயற்பாட்டுக் குறியீட்டை (KPI - Key Performance Indicator) இடவும் , செயற்பாட்டுக்கான முன்னேற்றங்களை அளவிடவும் உதவி புரியும்.
இந்த “JUMP” செயற்பாட்டுக்குழுவானது ஆழமான, நேர்மையான செயற்பாட்டிற்த் தேவையான திறன்களைக் கொண்ட சுதந்திரமான ஒரு குழுவாகும்.

நல்லிணக்கம்
நல்லிணக்கத்திற்கு உண்மையான மற்றும் தொடர்ச்சியான உரையாடல் அவசியமானது. அத்துடன் அனைத்துத் தொடர்புடைய பங்காளிகளுடன் ஈடுபாட்டிற்கான வாய்ப்புக்களின் துரித ஆய்வு மற்றும் 'ஒற்றுமைக் கொத்தணி ' என்னும் கருத்து ஒரு விதிவிலக்கான கட்டமைப்பாகும். இது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR), இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் காணாமற் போனோர் அலுவலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குகின்றது. இச்செயற்பாடானது அனைத்துச் சமூகங்களில் உள்ள மக்களும் அமைதியுடனும், கெளரவமாகவும் ஒன்றாக வாழக்கூடியதான பன்முகச் சமூகமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆளுநர் அலுவலகம் நல்லிணக்கத்தை இலகுபடுத்துவதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்குமான ஒரு தளமாக அமைகின்றது.
SDGs
நிலைபேறான அபிவிருத்திக்கான இலக்குகள்
தரமான கல்வி மற்றும் இளைஞர்கள்
அனைவருக்கும் உள்ளடங்கலான மற்றும் சமமான, தரமான கல்வியை உறுதிசெய்தலும், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை மேம்படுத்துதலும். அத்துடன் இளம் சமூகத்திற்கு நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பங்களிப்புச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதற்கும் தீர்மானம் எடுப்பதில் பங்கு கொள்ளவும் அதனைச் செயற்படுத்துவதற்குமுரிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் முக்கியமானதாகும்.

சுற்றுச்புறச்சூழலின் நிலைபேறான தன்மை
நிலைபேறான அபிவிருத்திக்காகச் சுற்றுப்புறச்சூழல் நிலப்பரப்புக்களின் நிலைபேறான பயன்பாட்டைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மற்றும் மேம்படுத்தல், காடுகளின் நிலைபேறான முகாமை, பாலைவனமாகுதற்கு எதிரான போராட்டம் மற்றும் நிலச்சீரழிவைத் தடுத்து நிறுத்தலும், மாற்றுதலும் மற்றும் உயிரியல் பல்வகைமையின் இழப்பைத் தடுத்து நிறுத்தல் மட்டுமன்றி கடல் சமுத்திரம் கரையோர வளங்கள் ஆகியவற்றின் நிலைபேறான பயன்பாடும் மற்றும் பாதுகாப்பும்.

பெண்களை வலுப்படுத்தல்
பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் முடிவுக்குக் கொண்டுவருதல் அடிப்படை மனித உரிமை மட்டுமன்றி நிலைபேறான எதிர்காலத்திற்கு இது அவசியமானதாகவும் உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் வலுப்படுத்தப்படல ;பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுகின்றது என்பதை நிரூபிக்கின்றது.

முடிவுகள்

பசும்போர்வை
பசும் பொருளாதாரத்தை நோக்கியதான நிலைபேறான தன்மையைச் சமப்படுத்தல்

இரட்டை எண்ணிக்கை வளர்ச்சி
மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் வளர்சிசியை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலும் வறுமையை ஒழித்தலும்.

உலகளாவிய கண்டு பிடிப்பு
உலகளாவிய சந்தைக்குப் புத்தாக்கத்திற்கான இயலுமையும் மற்றும் புதுமைகளைத் திறன் மிக்க வகையில் வழங்குதலும்.

எண்ணிம ( டிஜிற்றல்) வாழ்க்கை முறைமை
அனைத்து சேவைகளும் எண்ணிம முறையில் (டிஜிற்றல்) உங்கள் விரல் நுனிகளில் உள்ளன.

வேலைவாய்ப்புக்கள்
பொருளாதார மாற்றத்தினால் அதிகமான மற்றும் சிறந்த தொழில்களை உருவாக்கல்.